ஒன்றாக இணையும் தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்? பரபரப்பு தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா
572Shares
572Shares
lankasrimarket.com

ஓ.பி.எஸ் உடன் சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்தால் இழந்த அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டு விடலாம் என தினகரனிடம் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக சசிகலா தலைமை, ஓ.பி,எஸ் தலைமை என இரண்டாக உடைந்தது.

ஆர்.கே நகர் தேர்தலில் நின்ற டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

இதையடுத்து இரட்டை இலையை இரு தரப்புக்கும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் முடக்கியது.

மேலும், பணப்பட்டுவாடா தொடர்பாக ஆர்.கே நகர் தேர்தல் நிறுத்தபட்டதோடு ஆளுங்கட்சி ஆட்கள் வீட்டில் வருமான வரி சோதனையும் நடை பெற்று வருகிறது.

இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

அதில் பேசிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ் ஐ மன்னித்து சேர்த்து கொண்டால் இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்து விடும் என கூறியுள்ளார்.

ஆனால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ஒரு நிர்வாகி கூறுகையில், இரு தரப்புக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய ஓ.பி.எஸ் தரப்பினர், ஒரு குடும்பத்துக்குள் கட்சி போக கூடாது என்பதற்காகவே நாங்கள் அவர்களை எதிர்த்தோம்.

குடும்ப ஆதிக்கத்தை சசிகலா தரப்பு நிறுத்தினால் அதிமுகவை ஒன்றினைத்து விடுவோம் என கூறியுள்ளனர்.

மேலும், தேர்தல் ஆணையம் நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கும் எனவும் பின்னர் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் எங்களை ஆதரிப்பார்கள் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments