ஓடும் ரயிலில் வாட்ஸ் அப் மூலம் பிரசவம்: திக் திக் நிமிடங்களை விளக்கிய மருத்துவ மாணவர்

Report Print Raju Raju in இந்தியா
167Shares
167Shares
lankasrimarket.com

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ கல்லூரி மாணவர் தனது திரில்லிங்கான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஓடும் அஹமதாபாத்- புரி எக்ஸ்பிரஸில் சில தினங்களுக்கு முன்னர் பயணித்த சித்ரலேகா என்ற கர்ப்பினி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து இரயிலில் இருந்த விபின் பாக்வான்ராவ் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் தான் பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்தார்

சமூகவலைதள ஹிரோவாக தற்போது வலம் வரும் விபின் பிரசவம் பார்த்த தனது திரில் அனுபங்களை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் நாக்பூர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறேன்.

சில தினங்கள் முன்னர் ரயிலில் போகும் போது திடீரென கூச்சல் கேட்டது. அப்போது ஒரு பெண் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தார்.

மருத்துவர்கள் யாரும் இல்லாததால், மருத்துவ மாணவனாகிய நான் அவருக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தேன்.

குழந்தையின் தலைக்குப் பதில் தோள்பட்டை முதலில் வெளியில் தெரிந்ததால் முதலில் பயந்தேன்.

பின்னர் என் சீனியர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் தொடர்பு கொண்டு சில சந்தேகங்களை கேட்டேன்.

பின்னர் அவர்கள் அறிவுரைபடி குழந்தையை வெளியில் வெற்றிகரமாக எடுத்தேன்.

ஆனால் அந்த குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததைப் பார்த்து எனக்கு பயம் கூடியது.

பின் அந்த குழந்தையின் வாயோடு வாய் வைத்து சில முதலுதவிகளை செய்தேன். சிறிது நேரம் கழித்து குழந்தை மூச்சுவிட்டு அழத் தொடங்கியது.

பின்னர் ரயில் நிலையம் வந்த பின்னர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தோம் என விபின் கூறியுள்ளார்.

இதன் பின்னர் இரண்டு உயிர்களை காப்பாற்றிய சந்தோஷம்தான் இருந்தது என அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments