ஓபிஎஸ்க்கு சொந்தமாக தீவு! விஜயபாஸ்கர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா
524Shares
524Shares
lankasrimarket.com

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

பன்னீர் செல்வத்திற்கு சொந்தமாக தீவு உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியதாக ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியபோது, அதுபற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம். உங்களைப்பற்றி கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என கூறினார்களாம்.

பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் தீவு பற்றி உரிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாக விஜய பாஸ்கர் கூறினாராம். அது எவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments