விரைவில் காவி மயமாக மாறும் தமிழகம் - தமிழிசை

Report Print Nithya Nithya in இந்தியா

பா.ஜ. ஆட்சி தமிழகத்திற்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ‛ இந்தியா முழுவதும் காவி மயமாக மாறி வருகிறது.

தமிழகமும் விரைவில் காவி மயமாக மாறும். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்படும். பல திட்டங்களால் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி நன்மை செய்துள்ளார்.

விவசாயிகள் குறித்தும் விவசாய நலன் குறித்தும் பேச திமுகவிற்கு தகுதியில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பிரதமர் மோடியால் மட்டுமே தீர்வு காண முடியும். '' என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments