மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியை நடத்தி வருபவர் முருகசாமி.

இவர் நடத்திவரும் பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளை பள்ளியின் நிர்வாகியான் முருகசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வதாக அந்தப் பள்ளியின் முன்னாள் ஊழியர் அருண்காந்தி என்பவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி அருகே உள்ள கோதம்பாளையத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் உள்ள மாணவிகளிடம் கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பள்ளி நிர்வாகி முருகசாமி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த அந்த சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிசார், பள்ளித் தாளாளர் முருகசாமி, பள்ளியின் நிர்வாகிகளான சித்ராதேவி, பிரமிளா, பாபு, ரேவதி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இராணி என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments