புனேவில் ஐடி ஊழியர் நயனா புஜாரி, கடந்த 2009ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல தயாரான நயனாவை வீட்டில் கொண்டுச் சென்று விடுவதாகக் கூறி அவர் பணியாற்றிய அதே நிறுவனத்தின் காவலாளி, டாக்ஸி ஓட்டுநர், உள்ளிட்டோர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
வீட்டிற்கு கால தாமதமாக வர வேண்டிய மகள் வராததை அடுத்து நயனாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.
நயனா புனேவில் இருந்து 60 கி.மீ தூரத்திலுள்ள ராஜ்குருநகர் என்ற பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரில், ஒருவர் அப்ரூவராக மாறியதால், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மகேஷ் தாக்கூர், யோகேஷ் ராவத் உள்ளிட்ட மற்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து புனே நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது