சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Report Print Basu in இந்தியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கங்கா ராம் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உண்ட உணவில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக சோனியா காந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் இன்று வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்தபடியே, மம்தா பானர்ஜிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட சோனியா காந்தி, வரும் 16ம் திகதி தம்மை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேச்சு நடத்த இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments