டுவிட்டரில் கொளுத்தி போட்ட ராதிகா

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகை ராதிகா 2005 ஆம் ஆண்டு நடித்த கோககோலா விளம்பரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பெரிய போராட்டத்தை தொடர்ந்து, வெளிநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

இதன் எதிரொலியாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது.

இதற்கிடையில் தான் ராதிகாவின் விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த விளம்பரம் குறித்து தற்போது பேசுவது மனச்சிக்கலை ஏற்படுத்தும் என ராதிகா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், செம்பியன் @jallikattu_2017 என்பவர் நடிகை ராதிகா அண்மையில் வைரலான ராதிகாவின் கோக் விளம்பரம் தொடர்பாக "விபச்சாரி' என்பது உள்ளிட்ட மோசமான வார்த்தைகளுடன் விமர்சித்திருந்தார்.

இதனால் கோபம் கொண்ட ராதிகா, செம்பியனுக்கு ஒரு பதிலடி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் செம்பியன் @jallikattu_2017-ன் அம்மா மற்றும் குடும்பத்தினரை விபச்சாரிகளாக விமர்சித்தார்.

ராதிகாவின் இந்த விமர்சனத்தை ட்விட்டரில் போட்டுவிட்டார் செம்பியன் @jallikattu_2017.

இதற்கு பதிலடியாக நடிகை ராதிகா, தமது பெண் ரசிகைகளிடம் தவறாக நடந்து கொண்டார் செம்பியன் @jallikattu_2017 . அதனால் அவர் மீது புகார் கொடுங்கள் என கொளுத்திப் போட்டார்.

தற்போது, ராதிகாவின் ஆதரவாளர்கள் மற்றும் செம்பியனின் ஆதரவாளர்கள் டுவிட்டரில் சொற்போர் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments