இலங்கை பயணம்: தமிழில் டுவிட் செய்த மோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது.

இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வெசாக்’ என்ற புனித நாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில், வெசாக் தினத்துக்கு பாரம்பரிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

வெசாக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்தது. மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த நிலையில், இந்தப் பயணம்குறித்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள், இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், எங்கள் மீனவர்களை சுட்டுவீழ்த்தும் துப்பாக்கி தோட்டாவையாவது வாங்கி வாருங்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments