ஒரு பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

ஜம்மு காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் காவலரால் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டொமானா பகுதியில் உள்ள வீட்டில் 28 வயதான பெண் ஒருவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த வீட்டில் நகைகளை அவர் திருடியதாக கூறி பொலிசார் அவரை இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்தனர். பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பெண் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றுள்ளார்.

காவல் நிலையத்தில் அவர் இருந்த இரண்டு வாரத்தில் தன்னை ராகேஷ் சர்மா என்னும் காவலர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், காவல் நிலையத்தில் இருந்தபோது தனக்கு உண்பதற்கு எதுவும் கொடுக்கவில்லை எனவும், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது சிறுநீரை பிடித்து குடிக்க சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கபட்ட பெண்ணின் குற்றசாட்டை ராகேஷ் சர்மா மறுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கபட்டால் ராகேஷ்க்கு கடும் தண்டனை வழங்கபடும் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில நீதிமன்றம் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவ வசதியை செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments