அன்புள்ள விஜய்.....ஒரு தந்தையின் அற்புதமான கடிதம்

Report Print Basu in இந்தியா

விஜயபாஸ்கர் விஜய் தற்போது சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிகிறார்.

இவர், எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாகவும், வேறு கோணத்தில் பார்க்கும் விதமும் கொண்டிருப்பவர். அதற்குக் காரணமாக தன் அப்பாவே எனக் குறிப்பிடுவார்.

இதுகுறித்து விஜய் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார், பத்தாம் வகுப்பில் எல்லோரும் பாராட்டுகிற அளவுக்கு அதிகமான மதிப்பெண்கள். அதே போன்ற நல்ல மதிப்பெண் பிளஸ் டூ தேர்வில் வராது என்று தெரியும். ஆனால், இவ்வளவு குறைவாக வரும் என நினைக்கவில்லை.

என்னையும் அறியாமல் அழுதுகொண்டிருந்தேன். என் மனதில் உள்ள எண்ணங்களை எல்லாம் சென்னையில் இருந்த அப்பாவுக்கு நீண்ட கடிதமாக எழுதி அனுப்பினேன். அதைப் படித்ததும் அப்பா என்ன நினைப்பார் என்று குழம்பினேன். அடுத்த சில நாட்களில் அப்பா எழுதிய கடிதம் வந்தது.

அன்புள்ள விஜய்,

உன் கடிதம் வந்தது. மதிப்பெண் குறைந்துவிட்டதால் அம்மாவை நினைத்து வருந்தினேன். பின், அப்பாவை நினைத்ததும் மனதில் தாங்க முடியாத சோகம். எஸ்.எல்.பி அரசமரத்தடியில் நின்று கண் கலங்கினேன் என்று எழுதியிருந்தாய்.

அந்த வார்த்தைகளை மட்டும் ஆயிரம் முறை படித்தேன். கடவுளின் விளையாட்டை நினைத்து திகைத்தேன். என் பிள்ளைகள் கண் கலங்குவது எனக்குப் பிடிக்காது.

உன் எழுத்தே என்னை இவ்வளவு வருத்ததிற்கு ஆளாக்கினால், என் கண்முன்னே நீ அழுதால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. No.my dear, நீ எந்தக் காரணத்திற்கும் கலங்கக் கூடாது.

நீ அழுது கொண்டு கடிதம் எழுதிய எஸ்.எல்.பி மரத்தடியில், நீ எஸ்.எல்.எல்.சி பரீட்சை எழுதச் சென்றிருக்கும்போது, அப்பா தவம் கிடப்பேன், உன் வரவை எதிர்பார்த்து காத்திருப்பேன். நீ வந்ததும் எப்படி எழுதினாய் விலாவாரியாய் கேட்பேன். அது ஒரு காலம். ஆனால், இப்போது என் பிள்ளைக்கு ஆறுதல் கூற நான் அருகில் இல்லையே என்ற வருத்தம்தான் என்னை தினம் தினம் வதைக்கிறது.

நிறைவாக அப்பா கூறுவது இதைத்தான். ஒருவழியில் முயற்சி செய்கிறோம். வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. சங்கருக்கு (என் இரண்டாவது அண்ணன்) எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தபோது சிரித்தோம். ஒருவேளை கிடைக்கா விட்டால் வாய்விட்டா அழுவோம் எல்லோரும். அது முறையா?

நாம் செல்லும் பாதை எல்லாம் வெற்றிக்கே அழைத்துச்செல்லும் என்று உறுதியாய் சொல்ல முடியுமோ? அல்லது எல்லாமே வெற்றியாகி விடுவது என்பது உலகத்தில் நடந்து கொண்டா இருக்கிறது. தைரியமாய் இரு. மனதை அலைய விடாதே.

Be nomarl, be cheerful. அப்பா நேரில் ஆறுதல் கூறுவதுபோல் இதை எடுத்துக்கொண்டு சகஜ நிலைக்கு வா. எல்லாம் சரியாகிவிடும். மீண்டும் கலகலப்பாக பேசு, பழகு, பாரம் குறையும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். குழம்பாமல் தெளிவாகு.

இன்று எழுத நேரம் இல்லை. உன் கடிதம் கண்டவுடன் உடனே பதில் எழுத வேண்டும் என்றே அவசரமாய் இதை எழுதுகிறேன்.

ஒருமுறை அப்பா உன்னை நேரில் பார்த்தால் உன் குழப்பம் எல்லாம் தீரும். இதற்குத்தான் அப்பா வேண்டும் என்பது. அப்பா அருகே இல்லாத பிள்ளைகள் தெளிவில்லாமல் குழம்பி போகிறார்கள் இப்படித்தானோ என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு...

அப்பா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments