வாலிபர் தலையை வெட்டி காவல் நிலையத்தில் வீசியது ஏன்? கொலையாளிகள் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் வாலிபரை கொலை செய்து தலையை காவல் நிலையத்தில் தூக்கி போட்ட வழக்கில் கைதான கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்

புதுச்சேரி மாநிலத்தில் நேற்றிரவு வாலிபர் ஒருவரை கும்பலொன்று கொலை செய்து விட்டு தப்பியோடுவதாக பொலிசாருக்கு புகார் வந்தது.

சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற போது தலைதுண்டிக்கப்பட்ட உடலை கண்டறிந்தனர்.

அடுத்த 15வது நிமிடத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு பைக்கில் வந்த இருவர் துண்டிக்கப்பட்ட ஒரு தலையை வாசலில் போட்டு விட்டு தப்பி சென்றனர்.

துண்டிக்கப்பட்ட தலையும், புதுச்சேரியில் கிடந்த உடலும் சுவேதன் (17) என்பவருடையது என்பதை பின்னர் பொலிசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் கொலையாளிகள் குறித்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், வினோத் (24), தாஸ் (17) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுவேதன் அவர்களுடன் ஒன்றாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இந்த மூவர் மீதும் அடிதடி, செயின் பறிப்பு போன்ற ஏராளமான வழக்குகள் ஏற்கனவே இருந்துள்ளன.

அப்படி ஒரு திருட்டு வழக்கில் சுவேதனை பொலிசார் விசாரித்த போது, நான் திருடவில்லை. வினோத்தான் திருடினான் என அவர் கூறியதாகக் தெரிகிறது.

இதன் பின்னர் சுவேதனுக்கும், வினோத்துக்கும் பகை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை வெளிகாட்டாமல் இருவரும் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், சில தில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவிசங்கர் என்னும் ரவுடியிடம் சுவேதன் பழகியுள்ளார்.

அவர் இறந்த பிறகும் அவர்கள் கூட்டாளிகளுடன் பழகியுள்ளார்.

அவர்களுடன் சேர்ந்து சுவேதன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக நினைத்த வினோத், அதற்குள் சுவேதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

பின்னர், நேற்று சுவேதனை அழைத்து கொண்டு போன வினோத் அவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

சுவேதனுக்கு போதை அதிகமான நிலையில், அவரை வினோத்தும் அவர் நண்பர் தாஸும் கொன்று தலை, கைகளை தனியாக துண்டித்துள்ளனர்.

பின்னர் தலையை மட்டும் எடுத்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வாசலில் போட்டு விட்டு தப்பியோடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, பொலிசார் இருவரிமும் தலையை ஏன் தமிழ்நாட்டின் கடலூரில் போட்டீர்கள் என கேட்டதற்கு, புதுச்சேரி சிறை சாப்பாடு சரியில்லை.

அதனால் கடலூர் சிறைக்கு போகணும் என முடிவெடுத்து தான் அங்கு போட்டோம் என இருவரும் கூறியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments