இந்திய ரசிகர்களை ஏமாற்றிய ஜஸ்டின் பைபர்

Report Print Basu in இந்தியா

இந்தியாவிற்கு வந்துள்ள உலக புகழ்பெற்ற பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பாடாமல் உதட்டை மட்டும் அசைத்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த சர்வதேச பொப் பாடகர் 24 வயதான ஜஸ்டின் பைபர் முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்திட தனது குழுவினருடன் மும்பை வந்தார்.

மும்பை டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சியின் போது மேடையில் ஜஸ்டின் பைபர் பாட ஒவ்வொரு பாடலுக்கும் பல கலைஞர்கள் அவருடன் நடனமாடினர்.

இந்நிலையில் நிகழ்ச்சியை கண்ட ரசிகர்கள், ஜஸ்டின் பைபர் சில பாடல்களை நேரலையில் பாடாமல், பின்னணியில் படலை போட்டு அதற்கேற்ப உதட்டை மட்டும் அசைத்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது வரை இந்த குற்றச்சாட்டு குறித்து ஜஸ்டின் பைபர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments