பிளஸ் 2 தேர்வில் 99.52 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவி: நீட் தேர்வால் கனவு பறிபோகும் ஆபத்து!

Report Print Santhan in இந்தியா

குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 99.52% மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமோ என அச்சத்தில் உள்ளார்.

இந்தியாவின் ஆமதாபாத்தைச் சேர்ந்தவர் பர்ஹானா பவானி.இவர் பிளஸ் 2 தேர்வில், 99.52% மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது ஒரே கனவு மருத்துவராக வேண்டும். இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர்.

ஆனால், மருத்துவப் படிப்புக்காக, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நீட் அண்மையில் நடைபெற்றது. இதில், பர்ஹானா எதிர்பார்த்த அளவுக்கு எழுதவில்லை எனக் கூறுகிறார்.

அவர் குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டு, பிளஸ் 2 வரையிலும் படித்துள்ளார். இதனால், நீட் தேர்வுக்கிற்கு தன்னை தயார் செய்வதில் சிக்கல் இருந்ததாகக் கூறும் பர்ஹானா, விடா முயற்சியாக, தினசரி 5 முதல் 6 மணிநேரம் வரையும் படித்தும், எதிர்பார்த்தபடி நீட் தேர்வு எழுத முடியவில்லை எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை கொண்டிருந்தால் நல்லது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments