சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்தது ஏன்? மாணவியின் கதறல்! பாராட்டிய முதல்வர்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் மர்ம உறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் ஹரிஸ்வாமி(54).

இவரது ஆணுறுப்பை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 12ம் வகுப்பு படிக்கும் போதே எனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.

தந்தையை குணப்படுத்துவதாக கூறி ஹரிஸ்வாமி வீட்டிற்குள் நுழைந்தார், அடிக்கடி வந்து பூஜைகள் செய்வார்.

தந்தையின் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட சாமியார், எனது தாயுடன் தவறாக பழகினார்.

ஒருகட்டத்தில் என்னையும் பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார், கடந்த 8 ஆண்டுகளாக வேதனையை அனுபவித்தேன்.

இதுதொடர்ந்து கொண்டே இருந்தது, நேற்றும் தவறாக நடக்க முயன்ற போது கூரிய கத்தியால் ஆணுறுப்பை துண்டித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

வலியால் அலறிய ஹரிஸ்வாமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர், எனினும் 90 சதவிதம் சேதமடைந்ததால் மீண்டும் பொருத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒரு தைரியமான செயல், இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குறித்த மாணவியை பாராட்டியுள்ளார்.

எனினும் இந்த புகாரை மறுத்துள்ள சாமியார், தன்னைப் போன்ற சாமியாருக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை என்பதால் தானே வெட்டிக் கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments