அடைக்கலம் தேடி சென்ற இளம்பெண்: இளைஞர் செய்த விபரீத செயல்

Report Print Raju Raju in இந்தியா
1988Shares

பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி சென்ற இந்திய பெண்ணை இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்துள்ளதையடுத்து தன்னை இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும் என அந்த பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்தவர் Uzma (20), இளம் பெண்ணான இவர் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமான High Commission of India-வுக்கு தஞ்சம் கோர சென்றுள்ளார்.

அப்போது பாகிஸ்தானை சேர்ந்த Tahir Ali என்னும் இளைஞர் Uzmaஐ திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை, இதையடுத்து துப்பாக்கி முனையில் Uzmaஐ மிரட்டி Tahir திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து, தான் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப விரும்புவதாக Uzma நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்த Tahir, கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

Uzmaவின் வழக்கறிஞர் கூறுகையில், Uzmaவின் விசா வரும் 30ஆம் திகதியுடன் காலாவதி ஆவதால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றத்தில் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவு அலுவலகம் இதுகுறித்து வரும் 22ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், Uzmaவை தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை எனவும், அவரை கொடுமைப்படுத்தவில்லை எனவும் Tahir கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments