சாலை மறியல் போராட்டம்: வழி விடாததால் ஆம்புலன்சில் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலை மறியல் போராட்டம் காரணமாக ஆம்புலன்ஸ்கு வழி விடாததால் அதில் இருந்த சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் லூ குஷ் (7) இவனுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குஷ், பின்னர் மேல் சிகிச்சைக்காக நொய்டாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப் பட்டான்.

அப்போது கிரோட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ஆம்புலன்ஸ் சென்ற போது திடீரென பொதுமக்கள் சாலை மறியல் செய்தார்கள்.

இதனால் 10 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் ஆங்காங்கே நின்றன.

இதன் காரணமாக குஷ் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் அந்த சாலையிலிருந்து நகர முடியவில்லை.

இதையடுத்து சிறுவன் குஷ்-க்கு உடனடி சிகிச்சையளிக்க முடியாததால் அவன் ஆம்புலன்ஸ் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments