ரஜினிகாந்தை முதல்வராக்கும் முயற்சியில் 5 கட்சிகள்: உருவாகும் மெகா கூட்டணி

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக்கி தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த வாரம் தனது ரசிகர்களுடனான சந்திப்பின் போது போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் தயாராக இருங்கள் என தான் அரசியலில் நுழைவது குறித்து சூசகமாக கூறினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் ஓ.பி.எஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இது தவிர பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த் என்று கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதன் வெளிப்பாடாகவே ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோரை ரஜினி புகழ்ந்து பேசியதாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை வடிவமைக்கும் பணிகள் மிக ரகசியமாக நடந்து வருவதாகவும் ரசிகர் மன்றத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இமயமலையிலிருக்கும் ரஜினியின் குருவிடம் அனுமதி பெற்ற பிறகு கட்சியின் கொடி, சின்னம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments