கேரள சாமியார் பற்றி அம்பலமான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இளம் பெண்ணின் தாக்குதலுக்கு ஆளான சாமியார் பற்றிய உண்மை தகவல் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த கங்கேசானந்த தீர்த்தப்பதா என்ற ஹரிசுவாமி, பெட்டா என்ற நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் ஆறு ஆண்டுகளாக பூஜை நடத்தி வந்துள்ளார்.

அப்போது, அந்த நபரின் மகளை, 12ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தற்போது கல்லூரியில் படிக்கும் அந்த 23 வயது பெண்ணிடம், கடந்த வெள்ளிக் கிழமை இரவும் பூஜையின் போது அத்தகைய செயலில் ஈடுபட சாமியார் முயன்றபோது, அதை எதிர்த்து கடுமையாக போராடிய அந்த இளம் பெண், இறுதியில் ஹரிசுவாமியின் ஆணுறுப்பை கத்தியால் துண்டித்துள்ளார்.

துணிச்சலாக செயல்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் போலி சாமியார் எனத் தெரியவந்துள்ளது. இவர் மீது வழக்குப் பதிந்துள்ள பொலிசார், அவருக்கு எந்தெந்த வழியில் நிதி உதவிகள் கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments