நள்ளிரவு வரை 50 சிறுமிகளிடம் விசாரணை நடத்திய பொலிசார்: திடுக்கிடும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 50 சிறுமிகளை காவல் நிலையம் அழைத்துச் சென்று நள்ளிரவு 2:30 மணி வரை பொலிசார் விசாரணை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரத்லம் பகுதியில், நாக்பூரிலிருந்து குஜராத்துக்கு ரயிலில் சென்ற 50 சிறுமிகளை பொலிசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

சிறுமிகளை, ரயிலில் சென்ற ஒரு அடிப்படைவாத குழு மதமாற்றம் செய்ய அழைத்து செல்வதாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசார் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றார்கள்.

இரவு 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அச்சிறுமிகளை தரையில் அமர வைத்து நள்ளிரவு 2:30 மணி வரை பொலிசாரும், அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் விசாரணை முடிந்ததும் சிறுமிகள் அனைவரும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments