ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சுப்ரமணியன் சுவாமி என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Basu in இந்தியா

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments