கருணாநிதியின் வலது கையாக இருந்த என்.பெரியசாமி காலமானார்

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான என்.பெரியசாமி (78) காலமானார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர் என்.பெரியசாமி.

இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக இருந்தவர்.

முன்னாள் அமைச்சரான பெரியசாமி, சில மாதங்களாகவே உடல் நலக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மரணமடைந்தார்.

என்.பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments