நாட்டிற்குள் இராணுவத்தினரை விட்டால் பெண்களை கற்பழிப்பார்கள்: பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்

Report Print Basu in இந்தியா

இந்திய இராணுவத்தினர் நாட்டிற்குள் நுழைந்தால் பெண்களை கடத்திச் சென்று கற்பழிப்பார்கள் என கேரள கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சர்ச்சையாக பேசியுள்ளார்.

கேரளவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியதாவது, இது பாஜக-வின் கேவலமான அரசியல், கண்ணூரில் இராணுவத்தினரை கொண்டு வந்தால் என்ன நடக்கும்?

மக்களும்- இராணுவத்தினரும் மோதிக்கொள்வர்கள், இதன்போது இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

நான்கு பேர் ஒன்றாக நின்றால் அவர்களை சுட்டுக்கொல்வார்கள், எந்த பெண்ணையும் பிடித்துக்கொண்டு போய் கற்பழிப்பார்கள்.

இதை எதிர்த்து யாராலும் கேள்வி கேட்க முடியாது என இராணுவத்தை அவமதித்து பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments