ரஜினிக்கு தற்போது மக்களிடத்தில் செல்வாக்கு எப்படி உள்ளது?

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், நடிகர் என்பதைத் தாண்டி அவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கணக்கெடுக்கும் பணியில் உளவுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சமீபத்தில் சந்தித்த போது போருக்கு தயாராக இருக்கும் படியும், போர் வரும் போது பார்த்து கொள்ளலாம் எனவும் தனது அரசியல் பிரவேச நிலைபாடு பற்றி சூசகமாக கூறினார்.

இந்த பேச்சையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் உற்சாகமாக வலம் வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது.

ஆனால், ரஜினியோ பாஜகவை புறக்கணித்துவிட்டு தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே ரஜினிக்கு நடிகர் என்பதைத் தாண்டி மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதை அறிய மத்திய அரசு உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும், ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் யாருக்கு பாதிப்பு, எந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவருடன் கைகோர்ப்பார்கள் என்ற தகவலும் திரட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments