புதுப்பெண் கண்முன்னே நடந்த துயரம்: துடிதுடிக்க பலியான கணவன்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் புதுப்பெண் கண்முன்னே அவரது கணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26), ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், ஆனந்தி என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆனந்தி தன் கணவர் செந்தில்குமார் மற்றும் நாத்தனார் ராதாவுடன் அப்பா வீட்டுக்கு வந்துள்ளார்.

நேற்றைய தினம் மூவரும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற ராதா மற்றும் செந்தில்குமாரால் மீண்டு வரமுடியவில்லை.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு இருவரையும் தென்திருப்பேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே முதலுதவி அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments