பேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் சாகர் கிருஷ்ணா என்பவருக்கு பேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் அவர்களுடைய நட்பு தினமும் தொடர்ந்துள்ளது. முதலில் சிறிது நாட்களுக்கு பேஸ்புக்கில் உரையாடி வந்த இருவரும், சிறிது காலத்திற்கு பின்னர் மொபைல் போனிலும் பேச ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் நட்பு அதிகமாகவே அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து பழகியுள்ளனர். இந்த சந்திப்புகளின் விளைவாக சாகர் கிருஷ்ணா அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் அந்த பெண்ணை சந்திக்க கடந்த பிப்ரவரி மாதம் 6ம் திகதி அவருடைய கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார், இதனால் அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த பெண்னை கடத்திச் சென்ற சாகர் கிருஷ்ணா, அந்த பெண் மயக்கம் தெளிந்த பிறகு அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறிந்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே இழந்துள்ள சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது மராட்டிய மாநிலத்தின் புறநகர் பகுதியில் வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments