தமிழ்நாட்டில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்

Report Print Fathima Fathima in இந்தியா
509Shares
509Shares
ibctamil.com

தமிழ்நாட்டின் ஓமலூர் அருகே தனியார் பேருந்தில் சிறுமி ஒருவர் டிரைவர், கண்டக்டரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நிர்பயா வழக்கு போன்றே தமிழ்நாட்டில் கொடூர சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரிக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

இரவு ட்ரிப் முடிந்தவுடன் நாரணம்பாளையத்திலேயே பேருந்து நிறுத்தப்படும், மீண்டும் அதிகாலை பேருந்து இயக்கப்படும்.

நேற்றும் வழக்கம் போல் பேருந்து இயக்கப்பட்டது, அப்போது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரும் பேருந்தில் ஏறியுள்ளார்.

குறித்த தனியார் பேருந்தில் ஏறி கருப்பூருக்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே பேருந்து வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர், மாணவி மட்டும் தனியே வந்துள்ளார்.

தனியாக இருந்த மாணவியிடம் கண்டக்டர் பெருமாள் மற்றும் மாற்று டிரைவரான முருகன் பேச்சு கொடுத்துள்ளனர்.

பேருந்தை நிறுத்தும்படி சிறுமி கதறியும் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், மணிவண்ணன் என்பவர் பேருந்தை இயக்கியுள்ளார்.

பின்னர் முருகன் பேருந்தை ஓட்ட மணிவண்ணன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்றவர்கள் பேருந்தை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

ஆடைகள் ஏதுமின்றி கிடந்த சிறுமியை காப்பாற்றியதுடன், மூவரையும் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments