புயலைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை: பீதியில் பொதுமக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
260Shares
260Shares
ibctamil.com

ஆந்திரா, தெலுங்கானாவில் புயலைக் கிளப்பிய பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து பெங்களூரில் பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி சீனாவில் தான் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது.

இதனிடையே உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி போன்றவற்றை தொடர்ந்து பெங்களூர் சந்தைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காக்டாக் மற்றும் தும்கூரில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஹசன் பகுதியில் ஒரு கடை உரிமையாளர் மீது பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் புகார் செய்துள்ளார்.

இத்தகவலை அடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சர்க்கரைகளை மாதிரி சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக உணவு மற்றும் சிவில் விவகாரங்கள் அமைச்சர் யு.டி.காதர், இது ஒரு பெரும் மோசடி போல் தோன்றுகிறது.

விற்பனையாளர்களிடம் இருந்தும், வணிகர்களிடம் இருந்து பிளாஸ்டிக் சர்க்கரை கலந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments