கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in இந்தியா

மது அருந்திவிட்டு தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதால் அண்ணனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கோவையில் உள்ள சிங்கநல்லூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(43), இவர் மனைவி பரிமளாதேவி(40), இவர்களுக்கு வசந்தகுமார் (17) என்ற மகன் உள்ளார்.

ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதையடுத்து பரிமளாதேவி கோபித்து கொண்டு அதே பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு மகனுடன் சென்றுவிட்டார்.

கணவர் ஈஸ்வரன் அங்கேயும் சென்று மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் பரிமளாதேவி வீட்டுக்கு சென்ற ஈஸ்வரன் அவரிடம் தகராறு செய்ததோடு, அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் அங்கேயே ஈஸ்வரன் படுத்து தூங்கியுள்ளார்.

இதையடுத்து கணவன் மீது ஆத்திரமடைந்த பரிமளாதேவி இதுகுறித்து தனது அண்ணன் திருநாவுக்கரசுவிடம் கூறி அழுதுள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஈஸ்வரனை கொலை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி நள்ளிரவு வீட்டில் கிடந்த கயிற்றால், தூங்கிக்கொண்டு இருந்த கணவரின் கழுத்தை பரிமளாதேவி இறுக்கினார்.

அவரது அண்ணன் திருநாவுக்கரசு ஈஸ்வரனின் கால்களை பிடித்துக்கொண்டார். இதில் ஈஸ்வரன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கணவரை கொலை செய்தததை மறைக்க திட்டமிட்ட பரிமளாதேவி, ஈஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல அவர் கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈஸ்வரனின் அண்ணன் மகாலிங்கத்துக்கு போன் செய்து தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ஈஸ்வரன் சடலத்தை சோதனையிட்டனர். அப்போது ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் இல்லாமல் உள்ளதை கண்டுபிடித்தனர்.

மேலும் அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை பார்த்த பொலிசார் பரிமளாதேவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் தனது அண்ணனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தததை அவர் ஒப்பு கொண்டார்.

மேலும் அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஈஸ்வரன் கடந்த 18 ஆண்டுகளாக தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார்.

வீட்டுக்கு பணமும் கொடுக்காமல் இருந்தார், அவர் கொடுமை தினமும் அதிகரித்ததால் அவரை அண்ணனுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments