திருமணமான 5 நாட்களில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

திருமணம் ஆகி ஐந்து நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 5ஆம் திகதி திருமணம் நடைப்பெற்றது.

இதையடுத்து, நேற்று முன்தினம் பத்மாவை அழைத்து கொண்டு பாஸ்கர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு பத்மா குளித்துவிட்டு தனி அறையில் உடைமாற்ற சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் பாஸ்கர் வீட்டார் கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது பத்மா தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பத்மாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் பத்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பத்மாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments