சண்டையை முடிவுக்கு கொண்டு வந்த சசிகலாவின் கடிதம்

Report Print Fathima Fathima in இந்தியா

டிடிவி தினகரனுக்கு எதிராக ஆதரவை திரட்ட முயன்ற திவாகரனுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி திகார் சிறையிலிருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், கட்சி பணிகளை தொடர்ந்து செய்வேன் என அறிவித்தார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் 32 பேர் தங்களது ஆதரவை டிடிவி தினகரனுக்கு தெரிவித்தனர்.

இதனால் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என மூன்றாக பிரிந்து கிடந்துள்ளது.

இதற்கிடையே தினகரனுக்கு ஆதரவு தர வேண்டாம் என திவாகரன் புதிய அணியை திரட்டியுள்ளார்.

சசிகலா குடும்பத்துக்குள்ளேயே அதிகாரப் போட்டி எழ, சிறையிலிருந்து கொண்டே கைப்பட கடிதம் எழுதினாராம்.

அதில், என்னதான் நடக்கிறது. நமக்குள் சண்டை வேண்டாம். நாம் சண்டை போட்டால் பாஜகவுக்கும், எடப்பாடிக்கும் தான் லாபம். எனவே சண்டைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

இதனால் திவாகரன் கோஷ்டி அமைதி காத்து வருவதாகவும், தினகரனுக்கு ஆதரவு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments