பல பெண்களுடன் தொடர்பு: இளம்பெண்ணை கொலை செய்தது ஏன்?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் திருநாகேஸ்வரம் லாட்ஜில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் கொலை வழக்கில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூரின் திருநாகேஸ்வரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கடந்த 11ம் திகதி சுபாஷ்சந்திரபோஷ் என்பவர் பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கினார்.

12ம் திகதி அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது, அன்று மாலை வரை கதவு திறக்கப்படாததால் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்த ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார், உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பெண் கும்பகோணம் திருப்புறம்பியத்தை சேர்ந்த கீர்த்திகா என்பதும், தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.

இதனை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் குற்றவாளியான சுபாஷ்சந்திரபோஷை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சுபாஷ்சந்திரபோஷ் தற்கொலைக்கு முயன்றதுடன் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் பொலிசுக்கு தெரியவந்தது.

அங்கு சென்ற பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னையில் வேலை செய்து வரும் சுபாஷ்சந்திரபோஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 1/2 வயதில் ஆண் குழந்தையொன்று உள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் சுபாஷ்சந்திரபோசுக்கு, கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளனர், அப்போது தான் சுபாஷ்சந்திரபோசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் கீர்த்திகா விலகி சென்றுள்ளார், இதில் ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஷ் கீர்த்திகாவை மிரட்டி லாட்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

தானும் விஷம் வாங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது. இதையறிந்து கொண்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதற்கிடையே கீர்த்திகா கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments