கர்நாடகாவில் ஏலியன்கள் நடமாட்டமா? அதிர்ச்சியில் மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா
1327Shares
1327Shares
lankasrimarket.com

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்த மணல் வெளியில் திடீரென்று இருபதுக்கும் அதிகமான மிகப்பெரிய கால் தடங்கள் பதிந்து காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் அன்டுர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருபதுக்கும் அதிகமான மிகப்பெரிய கால் தடங்கள் பதிந்து காணப்பட்டது.

அதிகாலை இதைக்கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். சோதனையில் அந்த கால்தடங்கள் மற்ற எந்த உயிரினத்தின் கால் தடத்தையும் ஒத்து இருக்கவில்லை. எனவே இது ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் கால் தடம்தான் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் பீதியை கிளப்பி உள்ளது. அங்குள்ள பெரியோர்களும் இதைப்போல தங்கள் ஆயுளில் கண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஞாயிறன்று அதிகாலை ஒரு விசித்திரமான மூச்சு விடுவது போன்ற ஒலியை கேட்டதாகவும் கிராம மக்கள் சிலர் கூறுகின்றனர்.

நிச்சயமாக இது வேற்றுகிரவாசிகளின் நடமாட்டம்தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதனால் இரவில் மட்டுமின்றி பகலிலும் அச்சப்பட்டுக்கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கி இருக்கின்றனர்.

மக்களின் அச்சத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், "அது ஏலியன்ஸ் கால்தடம் இல்லை. மிருகங்களின் கால்தடம்தான். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை" என்று கிராம மக்களுக்கு வனத்துறை கூறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments