வழக்கில் புதிய திருப்பம்: மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்

Report Print Basu in இந்தியா

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இரட்லை இலை சின்ன பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ்- சசிகலா என இரு அணிகளாக பிரிந்தது.

ஆர்கேநகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் உரிமை கோர சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இதனிடையே தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனில் பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments