ராதிகா சரத்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை உயர்நீதிமன்றத்தில், ராடியன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனம், திரைப்படத்தை தயாரிக்க எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2.50 கோடி கடன் வாங்கியது.

இந்த கடன் தொகைக்காக தியாகராய நகரில் உள்ள நிலத்துடன் கூடிய வீட்டை ராதிகா, சரத்குமார் அடமானமாக கொடுத்தனர். வாங்கிய கடனை அவர்கள் திருப்பி தரவில்லை.

அதனால், அடமானம் வைத்த இந்த சொத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அடமான சொத்தை விற்பனை செய்ய தடைவிதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தடை உத்தரவை அகற்றக்கோரி சரத்குமார், ராதிகா சார்பில் உயர்நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், மனுவை தள்ளுபடி செய்தும், சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு ரூ.2 லட்சம் வழக்கு செலவு விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த தொகையை வழக்கு தொடர்ந்த ராடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments