கரும்புத் தோட்டத்தில் சிதறிக் கிடந்த குழந்தையின் உடல் உறுப்புகள்: நரபலியா?

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் தனித் தனியாக கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கா நாடு காலனித் தெருவில் வசிக்கும் சோமு என்பவருக்கு அதே பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கரும்புத் தோட்டம் உள்ளது.

அங்கு வயலில் சுமார் 4 வயது மதிக்கத் தக்க ஒரு குழந்தையின் கை, கால் உறுப்புகள் கிடந்திருக்கிறது.

இதனைக் கண்ட சிறுவன் ஒருவன் அளித்த தகவலின் பேரில் பைங்காநாடு கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் திருமக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையின் உடல் உறுப்புகளை கைப்பற்றி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அந்த உறுப்புகள் ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இது விவகாரத்தை தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதிந்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மட்டுமின்றி குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரும்புத் தோட்டத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments