குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் துஷ்பிரயோகம்..பெற்றோரிடம் கதறிய சிறுவன்: கேரள பாதிரியார் கைது

Report Print Basu in இந்தியா

கேரளாவில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயநாடு மாவட்டதைச் சேர்ந்த பாதிரியர் சஜி ஜோசப், 2016 கோடை விடுமுறையின் போது Meenangadiயில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த 14 முதல் 15 வயதுடைய சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கோடை விடுமுறையின் போது தான் அனுபவித்த துன்பங்களை சிறுவன் ஒருவன் பெற்றோரிடம் கூறி கதறியுள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு சிறுவன் பாதிரியாரால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகவலறிந்த பாதிரியார் சஜி ஜோசப் மூன்று நாட்களாக தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட கேரள பொலிசார் மங்களூரில் வைத்து பாதிரியார் சஜி ஜோசப்பை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments