ஓன்லைன் ஷொப்பிங்கில் செல்போனுக்கு பதிலாக வந்த செங்கல்: அதிர்ந்த வாடிக்கையாளர்

Report Print Raju Raju in இந்தியா

பிளிப்கார்ட் ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் மூலம் நபர் ஒருவருக்கு செல்போனுக்கு பதில் செங்கல் பார்சலாக வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர்குமார். இவர் பிளிப்கார்ட் ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனத்தில் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்ஃபோன் ஆர்டர் செய்திருந்தார்.

இதையடுத்து, நிறுவனத்திலிருந்து சுதீர்குமாருக்கு பார்சல் வந்துள்ளது. அதை பிரித்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

காரணம், பார்சலில் செல்போனுக்கு பதிலாக செங்கல் இருந்துள்ளது. இதையடுத்து உதவி எண்ணுக்கு சுதீர்குமார் போன் செய்து பிரச்சனையை கூறியுள்ளார்.

அதற்கு அந்நிறுவனம் சார்பில் பதிலளித்தவர், 12 நாட்களில் இதுபற்றி விசாரித்து அடுத்த நடவடிக்கை பற்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஆனால், செல்போனுக்கு தான் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை என்ற கவலையில் சுதீர்குமார் ஆழ்ந்துள்ளார்.

இதனிடையில், ஓன்லைன் ஷொப்பிங் மூலம் பொருட்கள் வாங்குவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே ஏமாறுவதில் இருந்து தப்பிக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments