3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஊசியால் குத்தி சித்திரவதை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 50 வயது நபர் ஒருவரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள தாயார் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் 3 வயது சிறுமி ஒருவரை தலைநகர் கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவமனைக்கு இட்டுசென்றுள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த அந்த குழந்தையின் அடிவயிற்றில் 2 அங்குல நீளத்திலான ஊசிகள் பல சொருகப்பட்ட நிலையில் அந்த சிறுமியின் உடலில் இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த தாயாரிடம் மருத்துவர்கள் காரணம் விசாரித்துள்ளனர். அதில் தாம் தமது கிராமத்தில் உள்ள ஒரு செல்வந்தரின் வீட்டில் பணி செய்து வருவதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் தமது மகளின் நோயை குணப்படுத்துவதாக கூறி மந்திரவாதம் செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மருத்துவ சோதனையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போது சிறுமியின் உடலில் இருந்த ஊசிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும் சிறுமி இதுவரை அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடலில் 20 நாட்களுக்கு மேலாக ஊசி இருந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீண்ட நாட்களாக அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி வந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே சிறுமியை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய அந்த 50 வயது நபர் குறித்த தகவல்களை திரட்டிய பொலிசார், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments