அபுதாபியில் 2 ஆண்டுகள் கோமாவில் இருந்தவர் தமிழகம் கொண்டு வரப்பட்டார்

Report Print Arbin Arbin in இந்தியா

ஐக்கிய அமீரகம் அபுதாபியில் விபத்தில் சிக்கி கடந்த 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபரை நேற்று தமிழகம் கொண்டு வந்தனர்.

அபுதாபியில் மின் உதவியாளராக பணியில் இருந்தவர் 37 வயதான சித்திரவேல்.

இவர் தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்தவர். இவர் பணி நிமித்தம் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார்.

இந்த சம்பவம் கடந்த 2015, யூனில் நடந்தது. கோமா சென்ற இவர் அங்கேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இவரது மருத்துவ செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்த நிலையில், இந்திய தூதரகம் உடையார் பணியாற்றி வந்த நிறுவனத்தின் மீது அழுத்தம் கொடுத்தது.

இதையடுத்து அவருக்கு பென்ஷன் இழப்பீடு கிடைத்தது. நீதிமன்றமும் உடையாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

தற்போது தமிழகம் கொண்டுவரப்பட்ட நிலையில் சேலம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சித்திரவேலின் சகோதரரும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர்தான், மருத்துவமனையில் தனது சகோதரை கவனித்து வந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments