டுவிட்டரிலிருந்து விலகினார் குஷ்பு: காரணம் இது தான்

Report Print Raju Raju in இந்தியா

டுவிட்டருக்கு அடிமையானது போன்ற உணர்வு ஏற்பட்டதால் அதிலிருந்து விலகியுள்ளதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு சமூகவலைதளமான டுவிட்டரில் அரசியல், சினிமா என பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிட்டு வந்தார்.

9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில், திடீரென்று டுவிட்டரிலிருந்து குஷ்பு விலகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் டுவிட்டருக்கு அடிமையானது போல் சமீபகாலமாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

காலையில் எழுந்ததுமே கை செல்போனை தான் தேடுகிறது. இது போதைக்கு அடிமையானதை போன்ற ஒரு உணர்வாகும்.

காலையில் பத்திரிக்கைகளை கூட படிக்க முடியவில்லை. டுவிட்டர் இல்லை என்றால் வாழ முடியாதா என யோசிக்க ஆரம்பித்தேன்.

அதன் விளைவாக டுவிட்டரில் இருந்து விலகி கொண்டதாக குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments