நடிகர் திலீப்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பொருளாதாரக் குற்றப் பிரிவு பொலிசார் நடத்திய விசாரணையில், நடிகர் திலீப் சுமார் 600 கோடி வரை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்காக நடிகர் திலீப் தலைமையில் ஒரு குழு செல்வது வழக்கம்.

இந்தப் பயணத்தின்போதுதான் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் இருந்து இந்த சொத்துக்கள் வாங்குவதற்கான முதலீட்டைப் பெற்று வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், மனைவியரின் பெயரில் சொத்துக்கள், போலி ஆவணங்களின் மூலம் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

தற்போது, வெளியாகியுள்ள இந்த தகவல்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments