தமிழகத்தில் ஊழல் குறித்து கமல்ஹாசன் கூறிய புகார்: கவுதமி கருத்து என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என கமல்ஹாசன் சொன்னது அவருடைய சொந்த கருத்து எனவும், அவர் கருத்தில் யாரும் தலையிட முடியாது எனவும் கவுதமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் கமலை சரமாரியாக வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

நடிகர் கமலுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை, டிவிக்கு வந்து விட்டார் என்றும் வயதான பின்னர் அரசியலுக்கு வர நினைக்கிறார் எனவும் அமைச்சர்கள் பேட்டியளித்து வருகிறார்கள்.

கமல்ஹாசனின் கருத்து குறித்து செய்தியாளர்கள் நடிகை கவுதமியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த கவுதமி, நாட்டில் கெட்ட விடயங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதே போல நல்ல விடயங்களும் இருக்கின்றன.

கமல்ஹாசன் சொன்னது அவருடைய சொந்த கருத்து, அதில் யாரும் தலையிட முடியாது என கவுதமி கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள நல்ல விடயங்கள் பற்றியும் மக்களுக்கு சொல்லலாம் எனவும் கவுதமி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers