மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
1078Shares

பள்ளிக்கூட மாணவியை குடி போதையில் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூரை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி (45). இவருக்கு திவ்யா (23) தனலட்சுமி (13) என்ற மகள்களும் அருண்குமார் (18) என்ற மகனும் உள்ளார்.

தனலட்சுமி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இரவு ஏழு மணிக்கு திவ்யாவும், அருண்குமாரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது தனலட்சுமி அலங்கோலமான நிலையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் பொலிசார் விசாரித்ததில் மாலை 6 மணி அளவில் தனலட்சுமியின் வீட்டுக்கு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் சென்றதாக அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் தனலட்சுமி வீட்டின் அருகில் ஒரு ஆண் செருப்பு இருந்தது. அது எதிர்வீட்டை சேர்ந்தவரின் செருப்பு எனவும் தெரிந்தது.

அங்கு விசாரித்ததில், அங்கிருந்த வாலிபர் இந்த செருப்பு என்னுடையது தான், ஆனால், சம்பவம் நடந்த போது எனது சித்தப்பா மகன் அசோக்குமார் (24) தான் செருப்பை போட்டு சென்றார் என கூறியுள்ளார்.

பின்னர், அசோக்குமாரை பிடித்து பொலிசார் விசாரித்ததில் அவர் தனலட்சுமியை கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி வரும் போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அடைய நினைத்தேன். சம்பவதன்று பெரியப்பா வீட்டுக்கு முழு போதையில் வந்தேன் என அசோக்குமார் கூறியுள்ளார்

அப்போது தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட அசோக்குமார் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

தனலட்சுமி கூச்சல் போடவே அவரின் வாயை பொத்தி அசோக்குமார் கற்பழித்துள்ளார்.

பின்னர், கத்தியால் தனலட்சுமியின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அசோக்குமாரை பொலிசார் கைது செய்தார்கள். கொடிய காரியத்தை செய்த அசோக்குமாருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என ஆலந்தூர் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்