திமுகவில் இணையவிருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி

Report Print Raju Raju in இந்தியா

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி விரைவில் திமுக-வில் இணைவார் என அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக உள்ளார். சமீபத்தில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தனது கணவர் மீது பொலிசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து தாடி பாலாஜி சமீபத்தில் பேசியுள்ளார்.

இதையடுத்து தாடி பாலாஜி விரைவில் திமுக-வில் உறுப்பினராக இணைவார் என அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers