ஆசைக்கு இணங்குமாறு பெற்ற மகளை வற்புறுத்திய தந்தை: கடைசியில் நடந்த சோகம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் மனைவியையும், பெற்ற மகளையும் கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் சேஷாத்திரி, இவரது மனைவி குமுதா.

இவர்களது மகள் சகுந்தலா அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது.

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் குமுதாவும், சகுந்தலாவும் இறந்து கிடந்தனர்.

ரத்தகறை படிந்த நிலையில் சேஷாத்திரி தப்பிச் சென்றார், இதுகுறித்து பொலிசுக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி சேஷாத்திரியை தேடினர்.

காப்பு காட்டு பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சேஷாத்திரி அளித்த வாக்குமூலத்தில், எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது, வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்புவேன்.

அன்றைய தினமும் குடிபோதையில் வந்தேன், சகுந்தலா அருகே சென்று ஆசைக்கு இணங்குமாறு கூறினேன், அவள் சத்தம் போட்டு குமுதாவிடம் சொன்னாள்.

குமுதா என்னை தடுத்ததும் ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தேன், தடுக்க வந்த சகுந்தலாவையும் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்