போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சார்மிக்கு தொடர்பா? நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா

போதைப் பொருளை விற்பனை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானா மாநிலம் கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு குறித்த நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்களில் நடிகை சார்மியும் ஒருவர், இவர் சார்பில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தன்னை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது தன்னுடன் வக்கீல் இருக்க அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, சார்மி விரும்பும் இடத்தில் பெண் அதிகாரிகள் மட்டும் விசாரணை நடத்த வேண்டும், அவரிடமிருந்து ரத்தம், தலைமுடி மற்றும் நகங்கள் போன்றவற்றை பலவந்தமாக சேகரிக்ககூடாது என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்