வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை முதுகில் சுமந்து காப்பாற்றிய பெண்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் வெள்ள பாதிப்பின் போது மம்தா ராவத் என்ற பெண் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு பெய்த கனமழை, நிலச்சரிவின் காரணமாக கடும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ள பாதிப்பினால் அப்பகுதியில் இருந்த வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏராளமானோர் வீடில்லாமல் தவித்தனர்.

இந்நிலையில் பன்கோலியை சேர்ந்த மம்தா என்ற மலையேற்ற வீராங்கணை, மலையேற்ற பயிற்சி நிலையம் சார்பில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இடம்பெற்றிருந்தார்.

மீட்பு பணியின் போது அவர், சுயநினைவில்லாத பெண் ஒருவரை தனது முதுகில் சுமந்து கொண்டு மலைப்பாங்கான பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீற்றர் தொலைவு அழைத்து சென்றார். அதன் பின் அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த வெள்ள பாதிப்பினால் மம்தாவின் வீடும் நீரில் அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் அவர் மக்களை மீட்பதிலேயே குறியாக இருந்தார்.

இவரது வீடு அடித்து செல்லப்பட்டதால் ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்