சசிகலாவின் வீடியோ உண்மைதான்.. ஆனால்: சசிகலாவின் அண்ணன் மகன் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
289Shares
289Shares
ibctamil.com

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் சிறைவிதி முறைகளை மீறி வெளியில் ஜாலியாக ஷொப்பிங் சென்ற வீடியோ காட்சியை முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்கியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயானந்த், இப்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சி உண்மையானவைதான்.

சிறைக்குள் இருந்து சசிகலா வெளியே சென்று வர வாய்ப்பேயில்லை என்றும், அவர் சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்ற போது பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்திற்குள் இருந்து இருவர் மட்டுமே எப்படி வெளியே சென்று விட்டு வர முடியும் என்றும் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்