நாங்கள் ஒருதாய் மக்கள்! அதிமுக உடைந்தது முதல் கைகுலுக்கிகொண்டது வரை

Report Print Deepthi Deepthi in இந்தியா
132Shares
132Shares
ibctamil.com
அதிமுக உடைந்தது முதல் தற்போது இணைந்தது வரை பற்றிய தொகுப்பு

2016 டிசம்பர் 5 - சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்தார்.

டிசம்பர் 31 - ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம்.

2017 பிப்ரவரி 5 - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்தது.

பிப்ரவரி 7 - பன்னீர் செல்வம் மெரினாவில் ஜெயலலிதா ஆன்மாவுடன் உரையாடிய பிறகு சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு

பிப்ரவரி 14 - சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனையை உறுதி செய்தது.

பிப்ரவரி 15 - சசிகலா அணியில் 122 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

ஆகஸ்ட் 14 - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்தனர்.

ஆகஸ்ட் 14 - மேலூரில் கூட்டம் போட்ட தினகரன் திருந்தவில்லை என்றால் திருத்துவேன் என எடப்பாடி, பழனிச்சாமி ஆகிய இருவரையும் எச்சரித்தார்.

ஆகஸ்ட் 17 - ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆகஸ்ட் - 19 - இறுதிக்கட்டத்தை எட்டியதாக சொல்லப்பட்ட பழனிசாமி- பன்னீர் செல்வம் இணைப்பு இழுபறியானது.

ஆகஸ்ட் 21 - நீண்ட இழுபறிகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளும் இணைந்தன.

ஆகஸ்ட் - 21 அதிமுக வழிபாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளராக மற்றும் தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்